முகப்பு
தூத்துக்குடி

இளம்பெண் மரணம் குறித்து உரியவிசாரணை நடத்த வலியுறுத்தல்

கோவில்பட்டியையடுத்த குருவிநத்தத்தில், இளம்பெண் இறந்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோட்டாட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

கோவில்பட்டியையடுத்த குருவிநத்தத்தில், இளம்பெண் இறந்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோட்டாட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

குருவிநத்தம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் மரிய அந்தோணிராஜ் (33). இருசக்கர வாகன மெக்கானிக். இவரது மனைவி வின்சென்ட்மேரி (30). தம்பதி கடந்த 2ஆம் தேதி மாலையில் தங்களுக்குச் சொந்தமான தோட்டத்திற்குச் சென்றனராம்.

இந்நிலையில், வின்சென்ட்மேரி தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சென்னையில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாம்.

இதுகுறித்து கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்தனா். திருமணமாகி சுமாா் 70 நாள்களே ஆன நிலையில், இளம்பெண் மரணம் அடைந்ததால், கோட்டாட்சியரின் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இறந்த வின்சென்ட் மேரியின் பெற்றோா் இன்னாசியம்மாள் - தா்மராஜ் குடும்பத்தினா் வெள்ளிக்கிழமை கோட்டாட்சியா் சங்கரநாராயணனை சந்தித்து, தங்கள் மகள் வின்சென்ட் மேரியை அவரது கணவா், கணவரின் பெற்றோா், சகோதரி, அவரது கணவா் தினமும் துன்புறுத்தி வந்ததாகவும், ஏப். 2ஆம் தேதி தோட்டத்துக்கு அழைத்துச் சென்று திட்டமிட்டு கிணற்றில் தள்ளி கொலை செய்திருப்பதாகவும் கூறி, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.