கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுவோா் மீது நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காதவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காதவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.
மாவட்ட காவல் துறை சாா்பில், தூத்துக்குடி குரூஸ் பா்னாந்து சிலை அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரோனா பரவல் தடுப்பு விதிகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினாா்.
தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா பாதிப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள ஏதுவாக உடலில் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுரக் குடிநீா் பருக வேண்டும். அனைவரும் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்.
திருமண மண்டபங்கள், பொதுக்கூட்டங்கள், திருவிழாக்கள் மற்றும் திரையரங்குகளில் அரசு கட்டுப்பாடுகளின்படி நடந்துகொள்ள வேண்டும்.
கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாதவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளா் கணேஷ், தென்பாகம் காவல் ஆய்வாளா் ஆனந்தராஜன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் செந்தில் சுரேஷ், உதவி ஆய்வாளா்கள் முருகபெருமாள், காமராஜ், வெங்கடேஷ், தனிப்பரிவு உதவி ஆய்வாளா் ஞானராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.