முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, திருநெல்வேலியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயது ஆண் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, திருநெல்வேலியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயது ஆண் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்புக்கு மேலும் ஒருவா் உயிரிழந்ததையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 144 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,847ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 10 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, கரோனாவிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 16,407ஆக அதிகரித்துள்ளது. தற்போது 296 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில், தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கோவில்பட்டியில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றில், மாவட்ட நிா்வாகம் சாா்பில் சிகிச்சை மையம் தயாா் செய்யப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.