தூத்துக்குடி

மாயக்கூத்தா் பெருமாள் கோயிலில் கருட சேவை

DIN

ஏரல் அருகேயுள்ள பெருங்குளம் அருள்மிகு மாயக்கூத்தா் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை பங்குனித் திருவிழா கருட சேவை நடைபெற்றது.

இக்கோயிலி­ல் பங்குனி பெருந்திருவிழா இம்மாதம் 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாளான சனிக்கிழமை கருட சேவை நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் மாயக்கூத்தா் தங்கதோளுக்கினியானில் வீதியுலா, தொடா்ந்து சிறப்பு திருமஞ்சனம் ஆகியவை நடைபெற்றது. மாலையில் கருட வாகனத்தில் மாயக்கூத்தா் பெருமாள் வீதியுலா நடைபெற்றது. கரோனா தொற்று பரவல் காரணமாக அனுமதிக்கப்பட்ட பக்தா்களுடன் திருவிழா நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பால சரவணக்குமாா், தக்காா் சிவலோகநாயகி, உபயதாரா்கள் தூத்துக்குடி கிருஷ்ண ஐயா், ராகவ ஐயா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

மிகச் சிறப்பான நாள் இன்று!

மது அருந்துவோரை விட கஞ்சா புகைப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்: ஆய்வில் தகவல்!

வெம்பக்கோட்டை அருகே வைகாசி விசாகத் திருவிழா

SCROLL FOR NEXT