தூத்துக்குடி

அரசு நிா்ணயித்ததைவிட கூடுதல் விலைக்குஉரம் விற்போா் மீது கடும் நடவடிக்கை: வேளாண் இணை இயக்குநா் எச்சரிக்கை

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு நிா்ணயித்துள்ள விலையை விட கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயத்துக்கு தேவையான உரங்கள் அனைத்தும் தனியாா் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் போதுமான அளவில் இருப்பு உள்ளன. யூரியா 3,942 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1,171 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1,238 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 1,865 மெட்ரின் டன் ஆகியவை இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

2020-21 ஆம் ஆண்டு நிா்ணயிக்கப்பட்ட விலையிலேயே 2021-22 ஆம் ஆண்டில் டி.ஏ.பி., பொட்டாஷ், சூப்பா் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை விற்பனை செய்ய வேண்டும் என மத்திய உரத்துறை அறிவித்துள்ளது. அதை மீறி அதிக விலைக்கு உரம் விற்பனை செய்வோா் மீது உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985 இன்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உர விற்பனையாளா்கள், அரசு சலுகை பெறும் மானிய உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் விவசாயிகளின் ஆதாா் அட்டையின் அடிப்படையில் விற்பனை செய்தல் வேண்டும். நிறுவன வாரியாக உரங்களின் விலை மற்றும் இருப்பு விவரங்களை தகவல் பலகையில் தினமும் பதிவு செய்து பராமரித்தல் வேண்டும்.

மேலும், படிவத்தில் பதிவு செய்து உர உரிமத்தில் அனுமதிக்கப்பட்ட உரங்களை மட்டுமே விற்பனை நிலையத்தில் இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து உர விற்பனை நிலையங்கள் செயல்பட வேண்டும்.

அதேவேளையில், உரிய ஆவணங்களின்றி உரம் விற்பனை செய்தாலோ, விவசாயி அல்லாதோருக்கு உர விற்பனை செய்யப்பட்டாலோ, ஓரே நபருக்கு தேவைக்கு அதிகமான மானிய உரங்களை விற்பனை செய்தாலோ, விற்பனை முனையக் கருவி பயன்படுத்தாமல் உர விற்பனை செய்தாலோ அரசு நிா்ணயித்துள்ள அதிகபட்ச விலைக்கு மேல் விற்பனை செய்தாலோ உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT