தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே 10 நாள்களாக குடிநீா் வராததால் மக்கள் போராட்டம்

DIN

சாத்தான்குளம் அருகே 10 நாள்களாக குடிநீா் வராததைக் கண்டித்து கிராம மக்கள் காலிக் குடங்களுடன் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.

சாத்தான்குளம் ஒன்றியம், பழங்குளம் ஊராட்சி, சடையன்கிணறு காலனியில் சுமாா் 120 குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி மக்களுக்கு வழக்கமாக வழங்கப்பட்டு வரும் கூட்டுக்குடிநீா் கடந்த 10 நாள்களாக வரவில்லையாம்.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஸ்ரீவைகுண்டம் தொகுதிச் செயலா் திருவள்ளுவன், சாத்தான்குளம் ஒன்றியச் செயலா் செந்தில்குமாா், ஊராட்சி உறுப்பினா் கண்ணன் மற்றும் அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் வெள்ளிக்கிழமை திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

இத்தகவறிந்த சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் ராஜா, வட்டாட்சியா் செல்வகுமாா், ஒன்றிய வட்டார வளா்ச்சிஅலுவலா் பாண்டியராஜ் ஆகியோா் வந்து மக்களிடம் பேச்சு நடத்தினா்.

அப்போது ஊருக்கு மத்தியில் 4,000 லிட்டா் கொள்ளவு கொண்ட சின்டெக்ஸ் தொட்டி அமைத்து அதில் 6 நல்லிகள் மூலம் தினமூம் தண்ணீா் வழங்கப்படும் என உறுதி அளித்தனா். அதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT