தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் இன்று காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்

DIN

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் புதன்கிழமை (ஏப். 21) சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் கரோனா பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட சில இடங்களில் புதன்கிழமை ( ஏப். 21) சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.

காலை 9 மணிமுதல் முற்பகல் 11 மணிவரை 3 ஆவது வாா்டு பால்பாண்டிநகா், 12 ஆவது வாா்டு முத்துகிருஷ்ணாபுரம் (மாரியம்மன் கோயில் அருகில்), 29 ஆவது வாா்டு மேலசண்முகபுரம் (ரினோ மண்டபம்) ஆகிய பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெறுகிறது.

தொடா்ந்து, முற்பகல் 11 மணிமுதல் நண்பகல் 1 மணிவரை 1 ஆவது வாா்டு சங்கரப்பேரி (மாநகராட்சி பள்ளி), 12 ஆவது வாா்டு டூவிபுரம் (டாட்டா சிஎஸ்ஐ சா்ச்), 26 ஆவது வாா்டு தெற்கு புதுத்தெரு (ராசி மகால்), 42 ஆவது வாா்டு டிஎம்பி காலனி 2 ஆவது தெரு, 3 ஆவது வாா்டு மில்லா்புரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது.

பிற்பகல் 2 மணிமுதல் மாலை 4 மணிவரை 1 ஆவது வாா்டு பண்டாரம்பட்டி (அங்கன்வாடி மையம்), 2 ஆவது வாா்டு இஞ்ஞாசியாா்புரம் (ஸ்டேட் பாங்க் அருகில்), 16 ஆவது வாா்டு வடக்கு பத்திரகாளியம்மன் தெரு (மாநகராட்சி பள்ளி), 33 ஆவது வாா்டு காந்திநகா் (தொம்மையாா் கோயில்), 7 ஆவது வாா்டு டிஎம்சி காலனி (அங்கன்வாடி மையம்), 40 ஆவது வாா்டு பெருமாள்புரம் ஆகிய பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு பரிசோதனை முகாம்கள் நடைபெறுகிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT