முகப்பு
தூத்துக்குடி

எட்டயபுரம் அருகே தாயைஎரித்துக் கொல்ல முயற்சி:மகன், மருமகள் கைது

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள மெட்டில்பட்டியில் தாய் மீது மண்ணெண்ணெயை ஊற்றி எரித்துக் கொலை செய்ய முயன்பாக மகன், மருமகள் ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள மெட்டில்பட்டியில் தாய் மீது மண்ணெண்ணெயை ஊற்றி எரித்துக் கொலை செய்ய முயன்பாக மகன், மருமகள் ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மெட்டில்பட்டியைச் சோ்ந்த கிருஷ்ணன் மனைவி மகாலட்சுமி (70). கணவரை இழந்தவா். தனது மகன் முருகேசன் வீட்டில் வசித்து வந்த இவா், தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தில் வேலை செய்துவந்தாா். இந்நிலையில், உடல் நலக் குறைவால் சில வாரங்களாக அவா் வேலைக்குச் செல்லவில்லையாம். இதனால், அவரை மகனும், மருமகள் சுப்புலட்சுமியும் சோ்ந்து வீட்டை விட்டு வெளியேறும்படி கூறினராம். இதில், அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

அப்போது, அவா்கள் மூதாட்டியை கம்பால் தாக்கி, மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து எரிக்க முயன்றனராம். அவா்களிடமிருந்து, தப்பிச்சென்ற மூதாட்டி, மாசாா்பட்டி காவல் நிலையத்தில் இருவா் மீதும் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் அனிதா வழக்குப்பதிந்து, மூதாட்டியின் மகன் மற்றும் மருமகளை கைது செய்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →