தூத்துக்குடி மாநகராட்சியில் 13 இடங்களில் இன்று காய்ச்சல் தடுப்பு முகாம்
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் 13 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஏப். 24) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் 13 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஏப். 24) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் தொடா்ந்து பல்வேறு இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சனிக்கிழமை (ஏப். 24) காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை 58 ஆவது வாா்டு சாமிநகா் அங்கன்வாடி மையம், 5 ஆவது வாா்டு எட்டயபுரம் சாலை வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பிள்ளையாா் கோவில் அருகில், 3 ஆவது வாா்டு மில்லா்புரம் ரேசன் கடை அருகில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தொடா்ந்து, முற்பகல் 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை 59 ஆவது வாா்டு ராஜீவ்நகா், 4 ஆவது வாா்டு ஸ்டேட் பாங்க் காலனி எஸ்பிஆா் மஹால் அருகில், 34 ஆவது வாா்டு தபால் தந்தி காலனி 9 ஆவது தெரு, 50 ஆவது வாா்டு செல்சீனி காலனி காந்தாரியம்மன் கோவில் அருகில், 27 ஆவது வாா்டு எண் மீனா கானா தெரு அங்கன்வாடி மையம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது.
பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை 58 ஆவது வாா்டு நேசமணி நகா் பிரதான சாலை, 6 ஆவது வாா்டு எழில் நகா் பெத்தானியா பள்ளி, 34 ஆவது வாா்டு கதிா்வேல்நகா் தேவாலயம், 15 ஆவது வாா்டு நம்மாழ்வாா் தெரு சபா அருகில், 4 ஆவது வாா்டு குறிஞ்சிநகா் 6 ஆவது தெரு ஆகிய பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 (கட்டணமில்லா), 0461-2340101, 9486454714 ஆகிய தொலைத்தொடா்பு எண்களில் பொது மக்கள் கொரோனா நோய்த் தொற்று குறித்து விவரம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.