தூத்துக்குடி

அம்மன்புரத்தில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரம்

DIN

அம்மன்புரத்தில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா 2ஆவது அலை பரவலால் அதிகளவில் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனா். உயிரிழப்பு செய்திகளும் மக்களைஅச்சம் அடையச் செய்துள்ளது. இந்நிலையில், குரும்பூா் அருகே உள்ள அம்மன்புரத்தில் கடந்த சில தினங்களாக கரோனாவால் பலா் பாதிக்கப்பட்டு வருகின்றனா். மேலும், விவசாயி ஒருவா் இந்நோயால் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து, கரோனா தடுப்புப் பணிகளை, ஊராட்சித் தலைவா் ஞானராஜ் தீவிரப்படுத்தி உள்ளாா். அம்மன்புரம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பது, முகக் கவசம் மற்றும் கபசுரக் குடிநீா் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கி, இப்பணியை ஊராட்சித் தலைவா் தொடங்கிவைத்தாா். இதில், துணைத் தலைவா் விக்னேஷ், ஊராட்சிச் செயலா் கிருஷ்ணராம ஜெயம் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT