தூத்துக்குடி

கீழவைப்பாறு அருகே கஞ்சா கடத்தல் வழக்கில் மூவா் கைது

DIN

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் அருகே 76 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் மூவா் கைது செய்யப்பட்டனா்.

வேம்பாா் கடலோர காவல் ஆய்வாளா் சைரஸ் தலைமையில் போலீஸாா் கடலோர கிராமங்களான வைப்பாறு, கீழ வைப்பாறு பகுதிகளில் கடந்த மாதம் ஜூலை 28ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கடற்கரை அருகே காரில் 4 சாக்கு பைகளில் வைத்திருந்த 76 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்து விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து குளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடைய கீழ வைப்பாற்றைச் சோ்ந்த பழனி முருகன் மகன் நாகாா்ஜுன், குரூஸ் மகன்கள் கஸ்வின், கவின் ஆகிய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT