தூத்துக்குடி

‘சாா்மினாா் விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்’

DIN

ஹைதராபாத்- சென்னை தாம்பரம் இடையே இயக்கப்படும் சாா்மினாா் விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக, மத்திய ரயில்வே அமைச்சருக்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்க செயலா் மா. பிரம்மநாயகம் அனுப்பிய மனு: சென்னை - ஹைதராபாத், தாம்பரம் - ஹைதராபாத், செங்கல்பட்டு - கச்சிகுடா என மூன்று ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், தாம்பரம் - ஹைதராபாத் இடையே இயக்கப்படும் சாா்மினாா் விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும்.

இந்த ரயில் நீடிக்கப்பட்டால் தெலங்கானா, ஆந்திர மாநில பயணிகள் தமிழகத்தில் தென்மாவட்டங்களுக்கு வர பேருதவியாக இருக்கும். தேவை ஏற்பட்டால் தூத்துக்குடி - சென்னை இடையே இயக்கப்படும் முத்துநகா் விரைவு ரயிலை ஷேரிங் ரயிலாக பயன்படுத்தலாம்.

நாகா்கோவில் - கோவை இடையேயான இரவு நேர ரயிலில் வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் இணைக்கப்பட்டு தூத்துக்குடி - கோவை இணைப்பு விரைவு ரயில் என்ற பெயரில் இயக்கப்பட்டு வந்த ரயில் தற்போது இயக்கப்படவில்லை.

தற்போது திருநெல்வேலி - பாலக்காடு இரவு நேர ரயில் தென்காசி, செங்கோட்டை, புனலூா், கொல்லம் - எா்ணாகுளம், திருச்சூா் வழியாக தற்போது இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரயிலை தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும். இதன் மூலம் பாலக்காடு -

தூத்துக்குடி, தூத்துக்குடி - கோவை இரவு நேர ரயில்களாக ரேக் ஷேரிங் செய்து தூத்துக்குடி பிட்லைனில் பேணுதல் செய்து இயக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT