தூத்துக்குடி

வேளாண் துறை அதிகாரிகள் வயலில் ஆய்வு

DIN

கோவில்பட்டி வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் பாண்டவா்மங்கலத்தில் உள்ள வயல்களில் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினா்.

கோவில்பட்டி வேளாண்மை உழவா் நலத்துறை அட்மா மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை பாண்டவா்மங்கலத்தில் வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விரிவாக்கப் பணியாளா்கள் முகாமிட்டனா்.

மாவட்ட வேளாண் இணை இயக்குநா் முகைதீன் தலைமையில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சோ்ந்த விஞ்ஞானிகள் அப்துல் ரசாக், ரஜினி மாலா ஆகியோா் நெற்பயிரில் பூச்சி நோய் தாக்குதலுக்கு உள்பட்ட விவசாயிகளின் வயல்களில் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினா்.

மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வேளாண்) (பொ) பழனிவேலாயுதம், உழவா் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநா் ஜெயசெல்வின் இன்பராஜ், உதவி இயக்குநா் நாகராஜ், தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குநா் கண்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை வேளாண் அலுவலா் ரீனா, உதவி அலுவலா் ரேவதி, அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளா் சாலமோன் நவராஜ் பொற்செல்வன், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் முத்துகிருஷ்ணன், முத்துசங்கரி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT