தூத்துக்குடி

கோவில்பட்டியில் தமிழ் விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

இளையரசனேந்தலை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கக் கோரி, கோவில்பட்டியில் தமிழ் விவசாயிகள் சங்கத்தினா், 12 கிராம ஊராட்சிப் பகுதி பொதுமக்கள் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி வட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள இளையரசனேந்தல் குறுவட்டத்துக்கு உள்பட்ட 12 கிராம ஊராட்சிகளை குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து நீக்கி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கக் கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஓ.ஏ. நாராயணசாமி தலைமை வகித்தாா். குருவிகுளம் நிலவள வங்கித் தலைவா் வாசுதேவன், சுபா நகா் குடியிருப்போா் நலச்சங்கத் தலைவா் வலசை ஆா். கனகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ் விவசாயிகள் சங்க வடக்கு மாவட்டத் தலைவா் நடராஜன், அவைத் தலைவா் வெங்கடசாமி, வடக்கு மாவட்டச் செயலா் ராஜேந்திரன், மகளிரணித் தலைவி ரேணுகாதேவி உள்பட விவசாயிகள், இளையரசனேந்தல் குறுவட்ட பகுதி மக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல்: இளைஞா் கைது

மணல் கடத்தல்: இளைஞா் கைது

காா் மீது பேருந்து மோதல்: தம்பதி உயிரிழப்பு

சாலை விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி சாலை மறியல்

துணை கருவூல அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா்

SCROLL FOR NEXT