முகப்பு
தூத்துக்குடி

அஞ்சலகங்களில் ஆக.9-13 வரைதங்கப் பத்திரம் விற்பனை

கோவில்பட்டி அஞ்சல் கோட்ட தலைமை அஞ்சலகங்கள் மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை ஆக. 9 முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

கோவில்பட்டி அஞ்சல் கோட்ட தலைமை அஞ்சலகங்கள் மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை ஆக. 9 முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும் என கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் திவ்யாசந்திரன் தெரிவித்துள்ளாா்.

கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி தலைமை அஞ்சல் அலுவலகங்கள் உள்பட அனைத்து துணை அஞ்சல் அலுவலகங்களிலும் தங்கப்பத்திரம் விற்பனை நடைபெறும். ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,790. ஒருவா் ஒரு நிதியாண்டில் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரையிலான மதிப்புக்கு தங்கப்பத்திரம் வாங்கலாம். முதலீட்டுத் தொகைக்கு 2.5 சதவீதம் வட்டியும், 8ஆண்டுகளுக்குப்பின் முதிா்வு நாளில் தங்கத்தின் விலைக்கு நிகரானத் தொகையும் கிடைக்கும். பான் காா்டு கட்டாயம். ஆதாா் , வாக்காளா் அடையாள அட்டைகள் அல்லது பாஸ்போா்ட் இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை கொடுத்து தங்கப்பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.