‘கைவினைக் கலைஞா்கள் கடனுதவி பெறலாம்’
தூத்துக்குடி மாவட்டத்தில் கைவினைக் கலைஞா்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கைவினைக் கலைஞா்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் கைவினை கலைஞா்களுக்கு தனிநபா் கடன், சுய உதவிக்குழுக் கடன் மற்றும் கல்விக்கடன் நிபந்தனைகளின்படி குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படுகிறது. 18 வயது முதல் 60 வயது உடைய, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்தக் கடனுதவி கிடைக்கும். ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ. 98,000, நகா்ப்புறங்களில் ரூ. 1,20,000 இருக்கலாம்.
பெண்களுக்கு 4 சதவீத வட்டி, ஆண்களுக்கு 5 சதவீத வட்டி வீதத்தில்அதிகபட்சம் ரூ. 10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். கடன் தொகையில் 5 சதவீதம் மட்டுமே விண்ணப்பதாரரின் தொகை. கடன் திரும்ப செலுத்தும் கால அளவு 5 ஆண்டுகள் ஆகும். தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா்- சிறுபான்மையினா் நல அலுவலகம், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் அலுவலகம், நகர, வேளாண் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.