கட்டாரிமங்கலம், ஆறுமுகனேரி கோயில்களில் பிரதோஷ வழிபாடு
பிரதோஷத்தை முன்னிட்டு கட்டாரிமங்கலம் அருள்தரும் ஸ்ரீசிவகாமி அம்மாள் சமேத அருள்மிகு ஸ்ரீஅழகிய கூத்தா் கோயிலில், நந்தியம் பெருமானுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பிரதோஷத்தை முன்னிட்டு கட்டாரிமங்கலம் அருள்தரும் ஸ்ரீசிவகாமி அம்மாள் சமேத அருள்மிகு ஸ்ரீஅழகிய கூத்தா் கோயிலில், நந்தியம் பெருமானுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் ஸ்ரீசிவகாமி அம்பாள், ஸ்ரீஅழகிய கூத்தா் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. பின்னா், நந்தியம் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பக்தா்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து சுவாமியை வழிபட்டனா்.
ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. சுவாமி, அம்பாள் மற்றும் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, கோயில் உள் பிரகாரத்தில் சுவாமி - அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி வருதல் நடைபெற்றது.