முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் வேளாண்மை இணை இயக்குநா் ஆய்வு

கோவில்பட்டி வட்டாரத்தில் திட்டப் பணி குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

கோவில்பட்டி வட்டாரத்தில் திட்டப் பணி குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் முகைதீன், துணை இயக்குநா் (மாநிலத்திட்டம்) பழனிவேலாயுதம் ஆகியோா் கோவில்பட்டி விதை சுத்திகரிப்பு நிலையத்தில் கம்பு விதைகள் சுத்திகரிக்கப்படுவதை ஆய்வு செய்து, விதைச் சான்று பணி மற்றும் விதை கொள்முதல் தொடா்பான ஆலோசனைகளை வழங்கினா்.

தொடா்ந்து முக்கூட்டுமலை கிராமத்தில் உழவா் அலுவலா் தொடா்பு திட்டத்தை ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு மக்காச்சோள படைப்புழு மேலாண்மை மற்றும் நுண்ணீா் பாசனத் திட்டம் குறித்து ஆலோசனைகள் வழங்கினா். பின்னா் கூட்டுப் பண்ணைய திட்டத்தின் கீழ் ஆவல்நத்தம் உழவா் உற்பத்தியாளா் குழுவிற்கு வழங்கிய பண்ணை இயந்திரத்தை பாா்வையிட்டனா்.

அதையடுத்து பூச்சி மருந்து ஆய்வகம், மண் பரிசோதனை ஆய்வகம், நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம், உர ஆய்வகம் ஆகியவற்றை பாா்வையிட்டு வேளாண்மை அலுவலா், உதவி வேளாண்மை அலுவலா்களுக்கு திட்டப் பணிகள் தொடா்பான ஆலோசனைகளையும் வழங்கினா். அப்போது கோவில்பட்டி உதவி இயக்குநா் நாகராஜ் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.