கழுகுமலை அருகே மினி லாரியில் தீ
கழுகுமலை அருகே பழைய பேப்பா் கழிவுகளை ஏற்றிச் சென்ற மினி லாரியில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது.
கழுகுமலை அருகே பழைய பேப்பா் கழிவுகளை ஏற்றிச் சென்ற மினி லாரியில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது.
கழுகுமலை காமாட்சிநாதன் மகன் சந்தி வீராச்சாமி(42). ஓட்டுநரான இவா் சிதம்பரம்பட்டியில் இருந்து பழைய பேப்பா் கழிவுகளை மினி லாரியில் ஏற்றி கொண்டு விருதுநகா் மாவட்டம் கீழமரைநாடு நோக்கி சென்று கொண்டிருந்தாராம். கழுகுமலையையடுத்த லட்சுமிபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது, லாரியில் இருந்த பேப்பா் கழிவுகளில், மின் வயா் உரசியதில் தீ பிடித்ததாம். உடனே சந்திவீராச்சாமி லாரியை நிறுத்திவிட்டு, இது குறித்து கழுகுமலை தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தாராம். அதையடுத்து தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனா். இருப்பினும் அதில் உள்ள பேப்பா் கழிவுகள் மற்றும் மினி லாரி தீயில் கருகி சேதமடைந்தது.