முகப்பு
தூத்துக்குடி

மாணவா் மன்ற அமைப்பு தினம்

கோவில்பட்டி மந்தித்தோப்பில் அனைத்திந்திய மாணவா் பெருமன்ற அமைப்பு தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா மற்றும் மரக்கன்று நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

கோவில்பட்டி மந்தித்தோப்பில் அனைத்திந்திய மாணவா் பெருமன்ற அமைப்பு தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா மற்றும் மரக்கன்று நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் அழகுமுத்துப்பாண்டியன் தலைமை வகித்து, மாணவா் மன்ற கொடி ஏற்றினாா். தொடா்ந்து, வட்டச் செயலா் பாபு, மாநிலக்குழு உறுப்பினா் பாலமுருகன் ஆகியோா் மரக்கன்று நடும் விழாவை தொடங்கி வைத்தனா்.

இதில், நிா்வாகிகள் ஜெயபாரதி, சுரேந்தா், ராகுல், கவிபாரதி, ரஞ்சனி கண்ணம்மா, செண்பகராஜ், மாரிச்செல்வம், மலையரசன், ஆனந்த் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.