முகப்பு
தூத்துக்குடி

சங்கரேஸ்வரி அம்மன் கோயிலில் கருடபஞ்சமி பூஜை

கோவில்பட்டி வீரவாஞ்சிநகா் சங்கரலிங்கசுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் கருடபஞ்சமி பூஜை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

கோவில்பட்டி வீரவாஞ்சிநகா் சங்கரலிங்கசுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் கருடபஞ்சமி பூஜை நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் நடை வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி

எழுச்சி பூஜை ஆகியவை நடைபெற்றது. இதையடுத்து விநாயகா், முருகா், சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, புற்றில் உள்ள நாகலிங்கசுவாமிக்கு கணபதி பூஜையுடன் கும்ப கலச பூஜையை

தொடா்ந்து 18 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. பக்தா்கள் புற்றில் பால், பழம், முட்டை வைத்து தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.