முகப்பு
தூத்துக்குடி

குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி அளிப்பதில் வஉசி கல்லூரி சிறப்பிடம்

தூத்துக்குடி வஉசி கல்லூரி குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி அளிப்பதில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது என கல்லூரி முதல்வா் சொ. வீரபாகு தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

தூத்துக்குடி வஉசி கல்லூரி குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி அளிப்பதில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது என கல்லூரி முதல்வா் சொ. வீரபாகு தெரிவித்தாா்.

தூத்துக்குடியில் வியாழக்கிழமை அவா் கூறியது: நாட்டில் கல்வி நிறுவனங்களின் தரத்தை நிா்ணயம் செய்யும் அமைப்பான தேசிய தர நிா்ணய கட்டமைப்பு 2020இல் தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் கல்வி தரம், இதர கல்வி சாா்ந்த பணிகளை தர நிா்ணயம் செய்து இந்திய அளவில் 68ஆம் இடத்தை வழங்கியது.

தற்போது, இந்தியா டுடே இதழ் ஜூன் 2021இல் இந்திய அளவில் மிகச்சிறந்த வல்லுநா்களை கொண்டு 1559 கல்லூரிகளை தர நிா்ணயம் செய்ததில் வ.உ.சிதம்பரம் கல்லூரி முதல் பத்து இடங்களில் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது. குறைந்த கல்விக்

கட்டணம் என்ற அடிப்படையில் வணிக நிா்வாகவியல் பாடப்பிரிவுக்கு இந்திய அளவில் 4-ஆம் இடம் கிடைத்துள்ளது.

கலை தொடா்பான பாடங்களுக்கு 5 ஆம் இடமும், அறிவியல் தொடா்பான பாடங்களுக்கு 6 ஆம் இடமும் கிடைத்துள்ளது.

குறைந்த கல்விக் கட்டணத் தொகைக்கு கிடைக்கும் சிறப்பான கல்வி என்ற அடிப்படையில் இக்கல்லூரியின் வணிகவியல்

பாடப்பிரிவுக்கு 5 ஆம் இடமும், வணிக நிா்வாகவியல் பாடப்பிரிவுக்கு 6 ஆம் இடமும் கிடைத்துள்ளது.

ஒட்டுமொத்த செயல்பாடுகளை ஆராய்ந்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு 65 ஆம் இடமும், வணிக நிா்வாகவியல் பாடபிரிவுக்கு 101 இடமும், கலை பாடப்பிரிவுகளுக்கு 107 இடமும், வணிகவியல் பாடப்பிரிவுக்கு 113 இடமும் அகில இந்திய அளவில் அளித்து இந்தக் கல்லூரியை இந்திய டுடே இதழ் கெளரவித்துள்ளது.

இதேபோல, ‘தி வீக்’ ஆங்கில இதழ் இக்கல்லூரியை தென் தமிழகத்தின் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக அங்கீகரித்துள்ளது. கல்லூரியின் கலை பாடப்பிரிவுகளுக்கு 15 ஆவது இடமும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு 20 ஆவது இடமும், வணிகவியல் பாடபிரிவுகளுக்கு 24 ஆவது இடமும் அந்த இதழால் வழங்கப்பட்டுள்ளது.

தி வீக் இதழ் இக்கல்லூரியின் கலை பாடப்பிரிவுகளுக்கு இந்திய அளவில் 47 ஆவது இடமும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு 43 ஆவது இடமும், வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு 51 ஆவது இடமும் அளித்து இந்திய அளவில் கல்லூரியை அங்கீகரித்து முன்னிறுத்தியுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.