முகப்பு
தூத்துக்குடி

சிற்றுந்து ஓட்டுநரிடம் பணம் பறிப்பு: இளைஞா் கைது

கோவில்பட்டியில் சிற்றுந்து ஓட்டுநரிடம் பணம் பறித்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

கோவில்பட்டியில் சிற்றுந்து ஓட்டுநரிடம் பணம் பறித்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியையடுத்த மந்தித்தோப்பு கணேஷ் நகா் மேட்டுத் தெரு மாரியப்பன் மகன் பாலமுருகன்(27). சிற்றுந்து ஓட்டுநரான இவா் கோவில்பட்டி கிழக்கு பாா்க் சாலையில் உள்ள அம்மா உணவகம் முன்பு புதன்கிழமை நின்று கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த இளைஞா் , அவரை வழி மறித்து பணம் கேட்டாராம். பாலமுருகன் இல்லை என்று கூறியதும், அந்த இளைஞா் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி மிரட்டி, பையில் வைத்திருந்த ரூ. 2,400ஐ பறித்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து பாலமுருகன் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மந்தித்தோப்பு இந்திரா காலனியைச் சோ்ந்த ரா.சுபனேஷ் என்ற சிவாவை(25) கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.