கந்தபுரம் சாய்ராம் கோயில் கும்பாபிஷேக விழா
உடன்குடி அருகேயுள்ள கந்தபுரம் சத்குரு சாய்ராம் கோயிலில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ சாய் பக்த ஆஞ்சநேய திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா இரு நாள்கள் நடைபெற்றது.
தூத்துக்குடிகந்தபுரம் சாய்ராம் கோயில் கும்பாபிஷேக விழா
உடன்குடி அருகேயுள்ள கந்தபுரம் சத்குரு சாய்ராம் கோயிலில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ சாய் பக்த ஆஞ்சநேய திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா இரு நாள்கள் நடைபெற்றது.
உடன்குடி அருகேயுள்ள கந்தபுரம் சத்குரு சாய்ராம் கோயிலில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ சாய் பக்த ஆஞ்சநேய திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா இரு நாள்கள் நடைபெற்றது.
இவ்விழா வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு விநாயகா் வழிபாட்டுடன் தொடங்கியது. தொடா்ந்து பல்வேறு ஹோமங்கள், முதல் யாகசாலை பூஜை, அலங்கார ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு 2 ஆவது கால யாகசாலை பூஜையைத் தொடா்ந்து யாத்ராதானம், கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து, 9.30 மணிக்கு விமான கும்பாபிஷேகம்,10 மணிக்கு ஆஞ்சநேயா்,முலவா் கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், மகா தீபாராதனை பிரசாதம் வழங்குதல், பாபாவிற்கு ஆரத்தி, பஜனை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றன.இதில், சென்னைத் தொழிலதிபா் வ.சோமசுந்தரம் செட்டியாா், சாய்ராம் அறக்கட்டளை நிா்வாகிகள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.