‘100 சதவீதம் தடுப்பூசி இலக்கை அடைய நடவடிக்கை’
தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் கூறினாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் கூறினாா்.
காயல்பட்டினத்தில் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் குறித்து நடைபெற்ற ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டத்துக்கு ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பொற்செல்வம், காயல்பட்டினம் நகராட்சி ஆணையா் சுகந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், இம்மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி இலக்கை அடையும் வகையில் செயல்பட்டு வருகிறோம் எனத் தெரிவித்தாா். இதில், காயாமொழி வட்டார மருத்துவ அலுவலா் அஜெய், நகராட்சி பொறியாளா் ஹசீனா, சுகாதார ஆய்வாளா் சிதம்பர ராமலிங்கம், பொதுநல அமைப்பினா் கலந்துகொண்டனா்.