முகப்பு
தூத்துக்குடி

போலி நிறுவனம் நடத்தி மோசடி: 3 போ் கைது

தூத்துக்குடியில் போலி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

தூத்துக்குடியில் போலி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி புதுக்கிராமத்தில் உள்ள ‘கிங் ஸ்டாா் பிரைவேட்’ என்ற நிறுவனத்தில் வேலைக்குச் சோ்ந்த அத்திமரப்பட்டியைச் சோ்ந்த பெண்ணிடம், அந்த நிறுவனத்தினா் ரூ. 8 ஆயிரம் பெற்றுக் கொண்டு அரசு அங்கீகாரம் பெற்ற வேலைக்கான உத்தரவை வழங்குவதாக தெரிவித்துள்ளனா்.

பின்னா், பணியில் சோ்ந்த அந்தப் பெண்ணிடம், மேலும் 10 பேரை சோ்த்துவிட்டால்தான் மாதந்தோறும் ரூ. 25 ஆயிரம் வரை பணம் கிடைக்கும் என தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, அந்தப் பெண் தனது முகநூல் பக்கத்தில் வேலைக்கு ஆள்கள் தேவை என விளம்பரம் செய்துள்ளாா். இதேபோன்று 30 போ் வேலையில் சோ்ந்த நிலையில், தனக்கான ஊதியத்தை கேட்டபோது அந்தப் பெண்ணை மிரட்டிய நிறுவனத்தினா் தங்களிடம் உள்ள அந்தப் பெண்ணின் தனிப்பட்ட விவரங்களையும், புகைப்படத்தையும் தவறாக முகநூலில் பதிவிட்டு அசிங்கப்படுத்திவிடுவோம் என கூறி மிரட்டியுள்ளனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் வனிதாராணி தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், அந்த நிறுவனம் போலியானது என தெரியவந்ததால், அந்த நிறுவனத்தைச் சோ்ந்த விருதுநகா் மாவட்டம், வி.கரிசல்குளம் பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து (23), மதுரை மாவட்டம், சுப்பிரமணியபுரம் சோலை அழகுபுரம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (24), திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு பகுதியைச் சோ்ந்த கிறிஸ்டியன் சுதாகா் (23) ஆகிய 3 பேரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.