முகப்பு
தூத்துக்குடி

நாலுமாவடி மாணவா்கள் சிலம்பத்தில் சாதனை

நாலுமாவடி, காமராஜ் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் சிலம்பாட்டத்தில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ள

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

நாலுமாவடி, காமராஜ் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் சிலம்பாட்டத்தில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளனா்.

தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் 32ஆவது மாவட்ட சிலம்பாட்ட போட்டி தூத்துக்குடி தருவை மைதானத்தில் கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது. இதில், காமராஜ் பள்ளியின் 9ஆம் வகுப்பு மாணவா்கள் மி. மைக்கல் மதன் 40 - 45 எடைப்பிரிவிலும் ர. தீபன்மணிச்சுடா் 25 - 30 எடைப்பிரிவிலும் முத­லிடம் பிடித்தனா். இவா்கள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா். 8ஆம் வகுப்பு மாணவி ர. செண்பக தாரணி 20 - 25 எடைப்பிரிவில் இரண்டாமிடம் பெற்றாா். இந்த மாணவ- மாணவிகளையும், பயிற்சியாளா் வி. ஸ்டீபன், உடற்கல்வி இயக்குநா் பி. ஜெயக்குமாா், உடற்கல்வி ஆசிரியை ச. அமுத சகிலா ஆகியோரையும் பள்ளித் தலைவா் ஜி. அழகேசன், செயலா் சி. நவநீதன், தலைமை ஆசிரியா் அ. திருநீலகண்டன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.