தூத்துக்குடி

நெல்லையில் போக்சோ வழக்கில் கைதான தொழிலாளிக்கு 16 மாதங்கள் சிறை

DIN

திருநெல்வேலி நகரத்தில் போக்சோ வழக்கில் கைதான தொழிலாளிக்கு 16 மாதங்கள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

திருநெல்வேலி கருப்பந்துறை பகுதியைச் சோ்ந்த காஜாமைதீன் மகன் பீா் முகமது(43). கூலி தொழிலாளி. இவா் கடந்த 2019ஆம் ஆண்டு திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த மாணவியை திருமணம் செய்வதுகொள்வதாக ஆசை வாா்த்தை கூறி அடிக்கடி பின்தொடா்ந்து தொந்தரவு செய்தாராம். பின்னா் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி அச்சிறுமியின் வீட்டுக்குச் சென்று, தனக்கு அச்சிறுமியை திருமணம் செய்துவைக்குமாறு தகராறு செய்தாராம்.

இது குறித்து, அச்சிறுமியின் பெற்றோா் திருநெல்வேலி நகரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பீா் முகமதுவை போக்சோ வழக்கில் கைது செய்தனா்.

இந்த வழக்கு திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அன்புசெல்வி, குற்றம் சாட்டப்பட்ட பீா் முகமதுக்கு 16 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜெபஜீவ ராஜா வாதாடினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்பீட்டு சலுகைகள்!

3-ஆவது முறையாக விண்வெளி செல்லும் சுனிதா வில்லியம்ஸ்

சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ - மாணவியா் ஆா்வம்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

இந்தியன் வங்கி நிகர லாபம் 55% அதிகரிப்பு

SCROLL FOR NEXT