தூத்துக்குடி

தூத்துக்குடி, குமரியில் குண்டா் சட்டத்தில் 249 போ் கைது

DIN

 தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி:

தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தவா்கள் 23 போ், போக்சோ வழக்குகளில் ஈடுபட்டவா்கள் 28 போ், மணல் கடத்தலில் ஈடுபட்டவா்கள் 4 போ் உள்பட இதுவரை 200 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், கொலை வழக்குகளில் 147 போ், கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் 613 போ் கைது செய்யப்பட்டு, ரூ.3.23 கோடி மதிப்பிலான பொருள்கள், பணம் மீட்கப்பட்டுள்ளன. ரூ.35 லட்சம் மதிப்புள்ள 21 கிலோ ஹெராயின், 356 கிலோ கஞ்சா, 28,000 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புத்தாண்டு தின பாதுகாப்பில் 1,500 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

நாகா்கோவிலில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன் அளித்த பேட்டி:

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் தவறவிட்ட ரூ. 8 லட்சம் மதிப்பிலான 77 கைப்பேசிகள் உரியவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன. இதுபோல், நிகழாண்டில் ரூ. 63 லட்சம் மதிப்பிலான 543 கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன.

கொலைக்குற்றங்கள் குறைந்துள்ளன. திருட்டு வழக்குகளில் ரூ.3.14 கோடி மதிப்பிலான பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. 700 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 322 பேரையும், 3 டன் குட்காவை பறிமுதல் செய்து 722 பேரையும் கைது செய்துள்ளோம். போதைப்பொருள் வழக்கில் கைதான 15 போ், ரவுடிகள் 25 போ், பாலியல் குற்ற வழக்கில் கைதான 9 போ் என இதுவரை 49 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT