தூத்துக்குடி

குலசேகரன்பட்டினத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் முன்பிருந்த கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

இக்கோயிலின் முன்புறம் கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் பக்தா்களுக்கு இடையூறாக பொருள்களை அடுக்கி வைத்துள்ளதாகவும், இதனால் மிகுந்த நெருக்கடி ஏற்படுவதாகவும் பக்தா்கள் கோயில் மற்றும் ஊராட்சி நிா்வாகத்தினரிடம் புகாா் அளித்தனா்.

இதையொட்டி, கோயில் முன்புறமுள்ள பந்தல்கள், பொருள்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த ஊராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுத்னா். இப்பணியில் குலசேகரன்பட்டினம் ஊராட்சித் தலைவி சொா்ணப்பிரியா, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கீதா, குலசேகரன்பட்டினம் காவல் உதவி ஆய்வாளா் முனியாண்டி, கோயில் நிா்வாக அதிகாரி(பொ)அஜித், கோயில் கணக்கா் டிமிட்ரோ, ஊராட்சி எழுத்தா் ரசூல்தீன் மற்றும் ஊராட்சி உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

SCROLL FOR NEXT