முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் காஞ்சி பள்ளி மாணவா்தடகளப் போட்டியில் சாதனை

மாநில அளவிலான தடகளப் போட்டியில் திருச்செந்தூா் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா் வெற்றி பெற்றுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

மாநில அளவிலான தடகளப் போட்டியில் திருச்செந்தூா் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா் வெற்றி பெற்றுள்ளாா்.

விருதுநகா் மாவட்ட தடகள அமைப்பு, மாநில தடகள அமைப்பு ஆகியவை இணைந்து சிவகாசி மெப்கோ தொழில்நுட்ப கல்லூரியில் 34ஆவது மாநில அளவிலான ஜீனியா் மற்றும் சீனியா் மாணவ, மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில், காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதமி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவா் ஆ. மதன் வெங்கடேஷ் சீனியா் பிரிவில் வட்டு எறிதல் போட்டியில் 37.04 மீட்டா் தொலைவு எறிந்து மாநில அளவில் இரண்டாம் இடத்தை பெற்றாா். இதன் மூலம் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளாா். சுட்தனை மாணவரை பள்ளித் தாளாளா், முதல்வா், ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.