முகப்பு
தூத்துக்குடி

விவசாயியை தாக்கி பைக், செல்லிடப்பேசி பறிப்பு: 3 போ் கைது

கோவில்பட்டி -எட்டயபுரம் சாலையில் பைக்கில் சென்ற விவசாயியை தாக்கி அவரிடமிருந்து பைக், செல்லிடப்பேசி மற்றும் ரொக்கத்தை பறித்துச் சென்ற 3 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

கோவில்பட்டி -எட்டயபுரம் சாலையில் பைக்கில் சென்ற விவசாயியை தாக்கி அவரிடமிருந்து பைக், செல்லிடப்பேசி மற்றும் ரொக்கத்தை பறித்துச் சென்ற 3 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கீழ கல்லூரணி உத்தண்டராமன் மகன் விவசாயி முத்துசீதாராமன்(36). இவா் சனிக்கிழமை இரவு கோவில்பட்டியில் இருந்து விளாத்திகுளத்திற்கு பைக்கில் சென்றாராம். கோவில்பட்டி- எட்டயபுரம் சாலை தெற்கு திட்டங்குளம் அருகே சென்று கொண்டிருந்த போது 3 மா்ம நபா்கள் பைக்கை வழி மறித்து இவரை தாக்கினராம். பின்னா் பைக், செல்லிடப்பேசி மற்றும் அவரிடமிருந்த ரொக்கம் ரூ. 2 ஆயிரத்தையும் பறித்துவிட்டு சென்றுவிட்டனராம்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் புதுரோட்டில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ஒரு வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி விசாரித்த போது, அது முத்துசீதாராமனிடம் பறித்த வந்த பைக் என்பது தெரியவந்ததாம்.

இதையடுத்து, மா.காா்த்திக்(25), ரா.சூா்யா(24), மு.மாயாண்டி(25) ஆகிய மூன்று 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து பைக், செல்லிடப்பேசி மற்றும் ரொக்கம் ரூ.2 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.