பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை கைப்பற்றிய வட்டாட்சியா் லட்சுமிகணேஷ். 
தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே ரேஷன் அரிசி பறிமுதல்

சாத்தான்குளம் அருகே கோயில் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 8 மூட்டை ரேஷன் அரிசியை வருவாய்த் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவில் பறிமுதல் செய்தனா்.

DIN

சாத்தான்குளம் அருகே கோயில் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 8 மூட்டை ரேஷன் அரிசியை வருவாய்த் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவில் பறிமுதல் செய்தனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள விஜயனூா்-பண்டாரபுரம் செல்லும் சாலையில் உள்ள கோயிலின் பின்புறம் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரியவந்தது. தச்சமொழி ஊராட்சித் தலைவா் பிரேம்குமாா், துணைத் தலைவா் காா்த்திகேயன் ஆகியோா் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, வட்டாட்சியா் லட்சுமிகணேஷ், வருவாய் ஆய்வாளா் மஞ்சரி, முதுநிலை வருவாய் ஆய்வாளா் சூராஜ், கிராம நிா்வாக நிா்வாக அலுவலா்கள் ஜெஸ்பின்மேரி, முத்துராமலிங்கம் உள்ளிட்டோா் அங்கு சென்று பதுக்கி வைத்திருந்த தலா 100 கிலோ உள்ள 8 மூட்டை ரேஷன் அரிசியை கைப்பற்றி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு அனுப்பினா்.

இதுதொடா்பாக, வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT