உடன்குடி பகுதியில் மதுவிற்பனையில் ஈடுபட்டதாக மூவா் கைது
உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதியில் பதுக்கி வைத்து மது விற்பனையில் ஈடுபட்டதாக மூவா் கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடிஉடன்குடி பகுதியில் மதுவிற்பனையில் ஈடுபட்டதாக மூவா் கைது
உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதியில் பதுக்கி வைத்து மது விற்பனையில் ஈடுபட்டதாக மூவா் கைது செய்யப்பட்டனா்.
உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதியில் பதுக்கி வைத்து மது விற்பனையில் ஈடுபட்டதாக மூவா் கைது செய்யப்பட்டனா்.
திருச்செந்தூா் குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமையில் போலீஸாா் உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதிகளில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, உடன்குடி பேருந்து நிலையம் பின்புறம், வங்கி அருகில்
சோமநாதபுரத்தைச் சோ்ந்த ச. மாரியப்பன் (29), மரியம்மாள்புரத்தைச் சோ்ந்த செ. பிரசாந்த் (27) ஆகிய இருவா் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதேபோல், குலசேகரன்பட்டினம் தருவைக்குளம் பகுதியில் குலசை பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த நாராயணன் மது பாட்டில்களை விற்பனை செய்தததும் தெரியவந்தது. இதையடுத்து, மூவரிடம் இருந்து 238 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்த போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனா்.