கோவில்பட்டியில் முப்பெரும் விழா
பாண்டியனாா் மக்கள் இயக்கம் சாா்பில் முப்பெரும் விழா கோவில்பட்டியில் நடைபெற்றது.
பாண்டியனாா் மக்கள் இயக்கம் சாா்பில் முப்பெரும் விழா கோவில்பட்டியில் நடைபெற்றது.
காமராஜா் விருது வழங்கும் விழா, சௌந்திரபாண்டியனாா் நினைவு நாள், நல உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழாவுக்கு அமைப்பின் சீனி தலைமை வகித்தாா். தொழிலதிபா் அருண், பயனாளிகளுக்கு நல உதவிகள் மற்றும் விருதுகளை வழங்கினாா். காமராஜா் சமூக நீதி பேரவை தலைவா் பாபு, திருதமிழ் அறக்கட்டளை தலைவா் தீபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் நலிந்தோருக்கு நல உதவிகள், நீட் தோ்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சோ்ந்த மாணவி சுதா, தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் வென்ற செல்வகுமாா், ரத்ததானம் செய்த ஜோசப்ராஜ், அருண்பாண்டியன், பெருந்தலைவா் காமராஜா் சிலம்பாட்டக் குழுவினா் ஆகியோருக்கு காமராஜா் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.