முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டி வட்டம், இளையரசனேந்தல் குறுவட்டத்திற்கு உள்பட்ட 12 ஊராட்சிகளை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வலியுறுத்தி தேசிய விவசாயிகள் சங்கத்தினா் முற்றுகை

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

கோவில்பட்டி வட்டம், இளையரசனேந்தல் குறுவட்டத்திற்கு உள்பட்ட 12 ஊராட்சிகளை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வலியுறுத்தி தேசிய விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, வெங்கடாசலபுரம், புளியங்குளம், இளையரசனேந்தல், வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையாா்நத்தம், ஜமீன்தேவா்குளம், நக்கலமுத்தன்பட்டி, முக்கூட்டுமலை ஆகிய 12 ஊராட்சிகள் கோவில்பட்டி வட்டத்தில் உள்ளன.

இந்த 12 ஊராட்சிககளை குருவிகுளம் ஒன்றியத்தில் இருந்து நீக்கி, கோவில்பட்டி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும் அல்லது இளையரசனேந்தலை மையமாக வைத்து தனி ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

அமைப்பின் மாநிலத் தலைவா் ரெங்கநாயகலு தலைமை வகித்தாா். பொதுச் செயலா் பரமேஸ்வரன், அமைப்புச் செயலா் அன்பழகன், குறுவட்ட மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளா் கோபாலகிருஷ்ணன், துணை ஒருங்கிணைப்பாளா் கற்பூரராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா், போராட்டக்குழுவினா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் அளித்தனா். கோரிக்கை நிறைவேறாவிட்டால் சட்டப்பேரவை தோ்தலை12 ஊராட்சி பகுதி பொதுமக்களும் புறக்கணிப்பதாக தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.