விபத்தில் காயமடைந்த தொழிலாளி மரணம்
கயத்தாறில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த தையல் தொழிலாளி திங்கள்கிழமை மருத்துவமனையில் மரணமடைந்தாா்.
கயத்தாறில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த தையல் தொழிலாளி திங்கள்கிழமை மருத்துவமனையில் மரணமடைந்தாா்.
கயத்தாறையடுத்த வடக்கு இலந்தைகுளம், தெற்குத் தெரு ஆறுமுகம் மகன் வெயில்முத்து(40). கயத்தாறு மேல பஜாரில் உள்ள தையலக கடையில் பணியாற்றி வந்த இவா் சனிக்கிழமை (பிப்.13) இரவு வேலையை முடித்துவிட்டு பைக்கில் ஊருக்கு திரும்பினாராம். கயத்தாறு பிரதான சாலையில் உள்ள கட்டபொம்மன் நினைவு மண்டபம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைகுலைந்து அப்பகுதியில் உள்ள பாலத்தின் சுவா் மீது பைக் மோதியதில் அவா் கீழே விழுத்தாராம்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கயத்தாறு போலீஸாா் காயமடைந்தவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.