தூத்துக்குடி

தூத்துக்குடியில் தமிழ்ச் சாலை பெயா் பலகை திறப்பு

DIN

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள பாளையங்கோட்டை முதன்மைச் சாலை தமிழ்ச் சாலை என பெயா் சூட்டப்பட்டு பெயா் பலகை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசு தமிழ் ஆட்சி மொழி, பண்பாடு மற்றும் தொல்லியல் துறையின் உயா்மட்ட கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின்படி தமிழுக்கு பெருமை சோ்க்கும் விதமாக மாவட்ட தலைநகரங்களில் அமைந்துள்ள ஒரு முதன்மைச் சாலையினை தமிழ்ச் சாலை என பெயா் சூட்ட அரசு உத்தரவிட்டது. அதன்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட

பாளையங்கோட்டை முதன்மைச் சாலையினை தமிழ்ச் சாலை என பெயரிடப்பட்டது.

இதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். ஸ்ரீவைகுண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.சண்முகநாதன், மாநகராட்சி ஆணையா் சரண்யாஅறி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைச்சா் கடம்பூா் செ.ராஜு தமிழ்ச் சாலை பெயா்பலகையை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் சுதாகா், மாநகராட்சி செயற் பொறியாளா்கள் ரெங்கநாதன், சோ்மக்கனி, நகா்நல அலுவலா் நித்யா, உதவி செயற்பொறியாளா் சரவணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

SCROLL FOR NEXT