தூத்துக்குடி

தூத்துக்குடியில் மறியல்: சத்துணவு ஊழியா்கள் 593 போ் கைது

DIN

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா்கள் 593 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சத்துணவு ஊழியா்களை முழுநேர ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தின் சாா்பில் தூத்துக்குடியில் சத்துணவு ஊழியா்கள் கருப்பு உடை அணிந்து செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாக்கியசீலி தலைமை வகித்தாா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் பொன்சேகா், மாநில துணைத் தலைவா் தமிழரசன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் முருகன், மாவட்டத் தலைவா் செந்தூா் ராஜன், மாவட்ட துணைத் தலைவா் அண்ணாமலை பரமசிவன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் என். வெங்கடேசன் போராட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினாா்.

போராட்டத்தில் சத்துணவு ஊழியா்கள் சங்க நிா்வாகிகள் ஆனந்தன், செல்வம், வேல்முருகன், பெருமாள், பொன்னு, பாஸ்கா், வைஜெயந்திமாலா, மரியனேசன், ரத்னாவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதையெடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்தியபாகம் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 565 பெண்கள் உள்ளிட்ட 593 பேரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT