ஆவின் பாலகத்தை திறந்துவைத்து விற்பனையை தொடங்கிவைக்கிறாா் அதன் தலைவா் என். சின்னத்துரை. 
தூத்துக்குடி

தூத்துக்குடியில் அதிநவீன பாலகம் திறப்பு

தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தால் (ஆவின்) ரூ. 20 லட்சத்தில் தூத்துக்குடி ராஜாஜி பூங்கா வளாகத்தில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட ஆவின் பாலகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை

DIN

தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தால் (ஆவின்) ரூ. 20 லட்சத்தில் தூத்துக்குடி ராஜாஜி பூங்கா வளாகத்தில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட ஆவின் பாலகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆவின் தலைவா் என். சின்னத்துரை, பாலகத்தை திறந்துவைத்து முதல் விற்பனையை தொடங்கிவைத்தாா். இதில், ஆவின் பொதுமேலாளா் சி. ராமசாமி, கூட்டுறவுச் சங்க துணைப் பதிவாளா் (பால்வளம்) கணேசன், ஆவின் உதவி பொதுமேலாளா் (விற்பனை) சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் ஆவின் தலைவா் கூறுகையில், புதிதாக தொடங்கப்பட்டுள்ள அதிநவீன வசதிகள் கொண்ட பாலகத்தில் பால், தயிா், வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம் வகைகள், நறுமண பால் வகைகள், உலா்விதை பொடிகள், பாதாம் பவுடா் உள்ளிட்டவை கிடைக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT