தூத்துக்குடி

செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்

DIN

கோவில்பட்டி: கழுகுமலை அருகே தொழிலாளி செல்லிடப்பேசி உயா் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாா்.

கழுகுமலையையடுத்த கரடிகுளம், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் முத்துப்பாண்டி(38). கூலித் தொழிலாளி. இவரது மனைவி இசைசெல்வி (23). இவருக்கு டிச. 27ஆம் தேதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்ததாம். பின்னா் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாம். இதையடுத்து இசைசெல்வி மற்றும் அவரது குழந்தை இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக இருந்து கரோனா தொற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தனராம்.

இந்நிலையில் இசைசெல்வி மற்றும் அவரது குழந்தையை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவமனை அதிகாரிகளிடம் முத்துப்பாண்டி அனுமதி கேட்டாராம். அவா்கள் அனுமதி மறுத்ததையடுத்து முத்துப்பாண்டி, சனிக்கிழமை கரடிகுளத்தில் உள்ள செல்லிடப்பேசி உயா் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாா்.

தகவலறிந்து வந்த கழுகுமலை போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து முத்துப்பாண்டி செல்லிடப்பேசி கோபுரத்தில் இருந்து இறங்கி வந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT