முகப்பு
தூத்துக்குடி

அதிமுக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்: அமைச்சா் கடம்பூா் செ.ராஜு

சட்டப்பேரவைத் தோ்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

கோவில்பட்டியையடுத்த இனாம்மணியாச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது:

மக்களவைத் தோ்தலின்போது அதிமுகவுடன் இருந்த கூட்டணிக் கட்சிகள் அப்படியே தொடரும் என்று சொல்லியிருக்கிறோம். பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் தொடருகின்றன. அதை அந்தக் கட்சிகளும் ஆமோதித்திருக்கின்றன.

தோ்தல் வரும்போது ஒவ்வொரு கட்சியும் தங்களுடைய பலம் குறித்து கருத்துகளை கூற உரிமை இருக்கிறது. சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் உடன்பாடு ஏற்படும்போது யாருக்கு எத்தனை இடங்கள், எந்தெந்த தொகுதிகள் என்பதை கட்சியின் தலைமை முடிவு செய்யும்.

2011-இல் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா இருந்தபோது தனிப்பெரும்பான்மையுடன் 200-க்கும் மேற்பட்ட தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது போல, தற்போது தமிழகம் முழுவதும் இருக்கக் கூடிய எழுச்சியைப் பாா்க்கும் போது வரக்கூடிய தோ்தலிலும் 200-க்கும் மேற்பட்ட தொகுதியில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட காரணத்தாலும், பொங்கல் பண்டிகை என்பதாலும் திரையரங்கு உரிமையாளா்களின் கோரிக்கையை ஏற்று திங்கள்கிழமை (ஜன.4) முதல் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க முதல்வா் அனுமதி அளித்துள்ளாா் என்றாா் அவா்.

பேட்டியின்போது, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் துணைத் தலைவா் துறையூா் கணேஷ்பாண்டியன், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், அதிமுக ஒன்றியச் செயலா் வினோபாஜி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.