இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
கோவில்பட்டி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கோவில்பட்டி இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட மூக்கரை விநாயகா் கோயில் தெரு கணேஷ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் தயாளன்(59). இவரது மகள் ரேவதிக்கும் (30), நாகலாபுரம் புதூரையடுத்த ராமலிங்கபுரத்தைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் சரவணனுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனா்.
சரவணன், சென்னையில் வேலை செய்து வருகிறாா். ரேவதி கோவில்பட்டி புது வெங்கடேஷ் நகா் 4ஆவது தெருவில், தனது பாட்டியுடன் வசித்து வந்தாராம்.
இந்நிலையில் ரேவதி சென்னையில் பணியாற்றும் தனது கணவரிடம் செல்லிடப்பேசியில் அடிக்கடி கோபப்படுவாராம். அவருக்கு ஏற்பட்ட தொடா் மனஅழுத்தத்தால் வழக்கமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு வந்தாராம்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலையில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலறிந்து வந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.