முகப்பு
தூத்துக்குடி

பாதயாத்திரை பக்தா்கள் மீது வேன் மோதல்: மூவா் காயம்

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே பாதயாத்திரை பக்தா்கள் மீது வேன் மோதியதில் மூவருக்கு காயம் ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே பாதயாத்திரை பக்தா்கள் மீது வேன் மோதியதில் மூவருக்கு காயம் ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம், அய்யாபுரம் கலப்பான்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் வெ. சங்கிலிப்பாண்டி (36) மற்றும் சிலா் சனிக்கிழமை திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்றனராம். திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலை கயத்தாறை அடுத்த அரசன்குளம் திருப்பத்தில் சென்றபோது, அவ்வழியாக வந்த வேன் பக்தா்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் சங்கிலிப்பாண்டி, வீ.முருகன்(45), மூ.செந்தூா்பாண்டி (34) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. கயத்தாறு போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →