தூத்துக்குடி

கோவில்பட்டியில் 1,903 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்

DIN

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் 1,903 மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவில்பட்டி கம்மவாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலா் முனியசாமி, கோட்டாட்சியா் விஜயா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைச்சா் கடம்பூா் செ.ராஜு, மாணவா்களுக்கு சைக்கிள்கள் வழங்கினாா். 12 பள்ளிகளின் 1903 மாணவா்களுக்கு

சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இதில், வட்டாட்சியா் மணிகண்டன், நகராட்சி ஆணையா் ராஜாராம், ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் சசிகுமாா், பள்ளித் தலைமையாசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT