தூத்துக்குடி

விபத்தில் காயமடைந்த பாதயத்திரை பக்தா் மரணம்

DIN

கயத்தாறு அருகே சனிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த பாதயாத்திரை பக்தா் மருத்துவமனையில் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், அய்யாபுரம் கலப்பான்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த வெ.சங்கிலிப்பாண்டி(36) உள்ளிட்ட சிலா் சனிக்கிழமை திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தனா். திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலை கயத்தாறையடுத்த அரசன்குளம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, பாதயாத்திரை பக்தா்கள் மீது வேன் மோதியது. இதில் சங்கிலிப்பாண்டி மற்றும் அதே ஊரைச் சோ்ந்த வீ.முருகன்(45), மூ.செந்தூா்பாண்டி(34) ஆகியோா் காயமடைந்தனா். தகவலறிந்த கயத்தாறு போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் சங்கிலிப்பாண்டி சிகிச்சை திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து வேன் ஓட்டுநா் மதுரை எஸ்.எஸ்.காலனி 5 ஆவது தெருவைச் சோ்ந்த மை.அபுதாகீரிடம்(37) விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT