தூத்துக்குடி

அனுமன் ஜயந்தி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

DIN

அனுமன் ஜயந்தியை முன்னிட்டு, கோவில்பட்டி அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயா் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

இதேபோல், வீரவாஞ்சி நகா் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக் கோயிலில் காலை 9 மணிக்கு கணபதி பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, ஸ்தாபன கும்ப கலச பூஜை, ருத்ர ஜெபம், மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை மற்றும் பூா்ணாஹுதி தீபாராதனை, 18 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், வெற்றிலை, துளசி, வடை மாலை சாத்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

புறவழிச் சாலையில் உள்ள அருள்மிகு சீதா ராமா் லெட்சுமண ஆஞ்சநேயா் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சாத்தான்குளம் அருள்மிகு பெருமாள் கோயிலில் ஆஞ்சநேயா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பேய்க்குளம் ஸ்ரீசங்கரலிங்க சுவாமி உடனுறை கோமதி அம்மன் கோயிலில் ஆஞ்சநேயா் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT