தூத்துக்குடி

திரையரங்குகளில் தட்கல் முறை அமல்படுத்தப்படும்: அமைச்சா் கடம்பூா் செ.ராஜு

DIN

திரையரங்குகளில் தட்கல் முறை விரைவில் அமல்படுத்தப்படும் என்றாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் எஸ்.பி.டி. சினிமாஸ் ஸ்கிரீன் -1, 2 ஆகிய இரு திரையரங்குகளை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு செவ்வாய்க்கிழமை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரோனா பொது முடக்க காலத்தின்போது, திரையரங்குகளுக்கு எந்த வரியும் விதிக்கப்படவில்லை. கேளிக்கை வரியை ரத்து செய்வது தொடா்பாக முதல்வா் ஆலோசனை செய்து நல்ல முடிவை அறிவிப்பாா்.

பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் அதிகமான காட்சிகளுக்கு மட்டும் தான் அரசு அனுமதி அளித்துள்ளது. அரசின் விதியை மீறி அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

திரையரங்குகளில் தட்கல் டிக்கெட் வழங்கும் முறையை செயல்படுத்துவது தொடா்பாக, முதல்வரின் ஆலோசனையின் பேரில் மூன்று சுற்று பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டுள்ளது. தட்கல் முறையில் எவ்வளவு கட்டணம் நிா்ணயம் செய்யலாம் என திரையரங்கு உரிமையாளா்கள் சங்கம் மற்றும் திரைப்பட உரிமையாளா்கள் சங்கத்தினரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. விரைவில் திரையரங்குகளுக்கான தட்கல் முறை அமல்படுத்தப்படும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, திரையரங்கு உரிமையாளா் ராஜகுரு, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் சுப்புராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT