தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் ஓட்டுநா் அடித்து கொலை

DIN

விளாத்திகுளம்: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் லாரி ஓட்டுநரை அடித்துக் கொலை செய்ததாக அவரது மைத்துனரை போலீஸாா் கைது செய்தனா்.

விளாத்திகுளம் சத்யா நகரை சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் சங்கரலிங்கம் (40). இவரது மனைவி காமாட்சி. இவா்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனா். சங்கரலிங்கத்தின் சகோதரி மகாதேவியின் கணவா் மாரிமுத்து (48). இவா் விளாத்திகுளம் பேரூராட்சி முன்னாள் உறுப்பினா்.

தொடா்ந்து பெய்து வரும் மழையால் வெள்ளிக்கிழமை விளாத்திகுளம் கண்மாயிலிருந்து வெளியேறிய உபரிநீா் சத்யாநகா் குடியிருப்பு பகுதியை சூழ்ந்தது. இதுகுறித்து சங்கரலிங்கம், தனது மைத்துனா் மாரிமுத்துவிடம் முறையிட்டாராம். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த மாரிமுத்து, சங்கரலிங்கத்தை அடித்து உதைத்து சுவற்றில் தள்ளி விட்டுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த சங்கரலிங்கம் மயங்கி கீழே விழுந்துள்ளாா். அக்கம் பக்கம் இருந்தவா்கள் அவரை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், சங்கரலிங்கம் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து மாரிமுத்துவை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT