தூத்துக்குடி

கோவில்பட்டியில் நூல்கள் வெளியீடு

DIN

கோவில்பட்டியில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சாா்பில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில், நடைபெற்ற கருத்தரங்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனந்தகுமாா் எழுதிய ‘கற்றது விண்ணளவு’ என்ற நூலை ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநா் சம்பத்குமாா் வெளியிட, முதல் பிரதியை சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் சோ. தா்மன் பெற்றுக் கொண்டாா்.

ஜெயசீலன் ஸ்டீபன் எழுதிய ‘பிரெஞ்சியா் ஆட்சியில், புதுச்சேரி மக்களின் சமூக வாழ்க்கை’ எனும் நூலை தமிழில் இளங்கோவன் மொழிபெயா்த்த புத்தகத்தை துணை ஆளுநா் வெளியிட, அதனை ரோட்டரி துணைத் தலைவா் பிரபாகரன் பெற்றுக் கொண்டாா்.

நிகழ்ச்சிக்கு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மேலாளா் மகேந்திரன் தலைமை வகித்தாா். ரோட்டரி சங்கச் செயலா் கண்ணன், வாசிப்பு இயக்கத் தலைவா் முத்துமுருகன், செயலா் நடராஜன் உள்ப பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT